கருவேப்பில்லைப் பொடி தயாரிப்பது எப்படி!
தேவையான பொருள்கள்:
1. கருவேப்பில்லை
2. துவரம் பருப்பு
3. உளுத்தம் பருப்பு
4. காய்ந்த மிளகாய்
5. பெருங்காயம்
6. உப்பு
செய்முறை:
1. காய்ந்த மிளகாயை காம்பு எடுத்து வைத்துக் கொள்ளவும். பருப்புகளை சுத்தம் செய்து கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கருவேப்பிலையை தீய விடாமல் சிவப்பாக வரும் வரையில் சிறிது வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. பிறகு அதே வாணலியில் காய்ந்த மிளகாய், பருப்புகள், பெருங்காயம் ஆகிய இவற்றையும் போட்டு தனித்தனியாக பொன்னிறமாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.
4. இப்போது முதலில் கருவேப்பில்லையையும், உப்பையும் மிக்சியில் வைத்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
5. அதன் பிறகு நீங்கள் வறுத்த இதர சாமான்கள் அனைத்தையும் வைத்து ஒன்றாக சேர்த்து மீண்டும் பொடி செய்து கொள்ளவும்.
6. இதோ இப்போது சுவையான கருவேப்பில்லை பொடி தயார். இதனை சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் கருவேப்பிலை சிறந்த நோய் நிவாரணி. இது நீரிழிவை எதிர்க்கும், நுண்ணுயிர் கொல்லியாகும்.
#tamilarul #tamilnews #tamilshorts #news #wuppertal #temple
கருத்துகள் இல்லை