May 18 – Tamil Genocide Remembrance Day-Finland
May 18 – Tamil Genocide Remembrance Day
Join us as we gather to remember the lives lost and demand justice for the Tamil genocide.
Date: 18.5.2025
Time: 15:00
Location: Koivukylän Ostoskeskus Tori
Let us honor the fallen, stand for truth, and keep the flame of resistance alive.
----
அனைத்து உறவுகளிற்கும் வணக்கம்! சிறிலங்கா பேரினவாத, சிங்கள அரசினால் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பு தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது. தமிழின அழிப்பின் உச்சக்கட்டமாக 2009 மே 18 இல் சிறிலங்கா அரசினால் நடாத்தப்பட்ட மாபெரும் மனிதப் பேரவலமான முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பை, தமிழின அழிப்பின் நினைவேந்தல் அடையாளமாக ஆண்டுதோறும் கடைப்பிடித்து வருகிறோம். அந்தவகையில், இம்மாதம் 18ம் நாள் மே 18 தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்குசெய்துள்ளோம். தமிழர்கள் நாம் ஒன்றுகூடி, சிங்கள அரசபயங்கரவாதத்தினால் எமக்கு இழைக்கப்பட்ட மனித நாகரிகமற்ற கொடுமைகளை அனைத்துலகிற்கும் பறைசாற்றுவோம். கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகளிற்கு விளக்கேற்றி வணக்கம் செலுத்துவோம். அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
கருத்துகள் இல்லை