வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம் – நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கி வைப்பு!!
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், வாழ்வாதார செயல் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளை ஆதரிக்கும் நோக்கில், , நிந்தவூர் அரசாங்க கால்நடை வைத்தியர் அலுவலகத்தில் தொழில் முயற்சிக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு 2025 ஜூன் 19, இன்று நடைபெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ. எம். அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு, தலா 20 நாட்டுக்கோழிக் குஞ்சுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இது வசதி குறைந்த குடும்பங்களின் வருமானத்தை உயர்த்தும் சிறிய அளவிலான தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எம். சுல்பிகார் மற்றும் கால்நடை மருத்துவர் ரிப்கான் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிக் குஞ்சுகளை வழங்கி வைத்தனர் .
இத்திட்டம், வசதி குறைந்த குடும்பங்கள் தங்களைத் தாங்களே தாங்கிக்கொள்ளும் திறனை வளர்த்திடவும், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், மற்றும் தொடர்ச்சியான வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கிலும் செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை