ஈரானின் போர்க்கால தளபதியை அலி ஷத்மானியை இஸ்ரேல் கொன்றுள்ளது.!

 


இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ஏற்கனவே ஈரானின் போர்கால தளபதியை இஸ்ரேல் போட்டு தள்ளிய நிலையில் அந்த பொறுப்புக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நபரும் இப்போது கொல்லப்பட்டுள்ளார். இது ஈரானுக்கு பெரிய சிக்கலாக பார்க்கப்படுகிறது.


இஸ்ரேல் - ஈரான் நாடுகள் கடுமையாக மோதி வருகின்றன. இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்தது. இந்த மோதலுக்கு நடுவே கடந்த ஆண்டு ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் ஈரானை தாக்கியது.

இதையடுத்து ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது. 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென்று ஈரானை தாக்கியது.


ஈரானின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டு மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. மேலும் பல தளபதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதில் இஸ்ரேலை சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டனர். தற்போது இருநாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் தான் ஈரானின் முக்கிய தளபதியை இஸ்ரேல் கொன்றுள்ளது. அதாவது ஈரானின் போர்க்கால தளபதியை அலி ஷத்மானியை இஸ்ரேல் கொன்றுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெஹ்ரானின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

#

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.