நிந்தவூரில் மரக்கறி கடையில் போதைப்பொருள் விற்பனையில் ஒருவர் கைது!
மரக்கறி விற்பனை நிலையம் எனும் போர்வையில், நிந்தவூர் பிரதான வீதியில் மறைமுகமாக இயங்கி வந்த போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர்க்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.
நேற்று (18) காலை, நிந்தவூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த கடையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சுற்றிவளைப்பின் போது, சந்தேக நபர் தன்னை கைது செய்ய வந்ததை உணர்ந்து வயல்வெளிக்குள் தப்பி ஓடியுள்ளார்.
எனினும், புலனாய்வு பிரிவினரும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து கடும் சிரமத்துடன் அவரை பின்தொடர்ந்து பிடித்து கைது செய்தனர்.
அத்துடன் இந்த மரக்கறி விற்பனை செய்யும் கடையில் இருந்து தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு .வருகின்றனர்
கருத்துகள் இல்லை