யாழில் பொலிஸ் துனையுடன் வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவு!📸


யாழ் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எழுதுமட்டுவாழ் பகுதியில் கடந்த (25) திகதியன்று குடும்பஸ்தர் ஒருவர் தனது இரு மகளுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில் அருகில் உள்ள கிளாலி எழுதுமட்டுவாழ் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர் குழு ஒன்று இரவு வேளை குறித்த குடும்பஸ்தர் வீட்டிற்குள் புகுந்து அவரை கடுமையாக தாக்கி பின் வாள் வெட்டும் செய்துள்ளனர்.

அவரது மகளையும் வெட்ட முற்பட்ட போது சம்பவ இடத்தில் இருந்து மகள் தப்பிச்சென்று அருகில் உள்ள இளைஞர்களை அழைத்து வந்த போது குறித்த வாள்வெட்டு காவாலிகள் தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கொடிகாம பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் குறித்த சந்தேக நபர்கள் தப்பி சென்று தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.