அரச பயங்கரவாத உலக ஒழுங்கைப் புரிந்து கொள்ளல்.!


2009 தமிழின அழிப்பின் போது மட்டுமல்ல போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து சிங்கள இன அழிப்பு அரசின் இலக்காக மருத்துவமனைகள் இருந்தன. 

இறுதி இன அழிப்பு நாட்களில் புதுக்குடியிருப்பு, புது மாத்தளன், முள்ளிவாய்க்கால் மருத்துவமனைகள் தாக்கப்பட்டு மக்கள் கொல்லப்பட்டதை இந்த உலக அரச பயங்கரவாதம் வேடிக்கை மட்டுமே பார்த்தது.


அண்மையில் காசாவில் இஸ்ரேல் மருத்துவமனைகளைத் தாக்கிக் குழந்தைகளைக் கொன்றது. அப்போதும் மவுனம்.


அவ்வளவு ஏன். இரண்டு நாட்களுக்கு முன்பு ஈரானின் இரண்டு மருத்துவமனைகளைத் தக்கியது இஸ்ரேல். கண்டிக்க யாருமே இல்லை.


இன்று இஸ்ரேலில் ஒரு மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு உலகமே கொந்தளிக்க வைக்கப்படுகிறது. அவசர முடிவுகள் எடுக்கக் கூட்டங்கள் நடக்கின்றன.


இதற்குப் பெயர்தான் அரச பயங்கரவாத உலக ஒழுங்கு. அதைக் கட்டிக் காப்பவர்கள் மட்டும்தான் இங்கு காக்கப்படுவார்கள். ஏனையோர் தேடித் தேடி வேட்டையாடப் படுவார்கள்.


2009 இல் தமிழீழ நடைமுறை அரசும், அதன் குடிமக்களும் அழிக்கப்பட்டதன் பின்னணி இதுதான்.


ஏனென்றால் பு லி க ள் இந்த அரச பயங்கரவாத உலக ஒழுங்கை அசைத்துப் பார்த்தார்கள். கூடவே புதிய உலக ஒழுங்கை நோக்கி அணியமாக முன்னேறிக் கொண்டுமிருந்தார்கள்.


இதை ஏன் திரும்பத் திரும்பப் பேசுகிறோம் என்றால் இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என்பது மட்டுமல்ல விடுதலையையும் விரைவு படுத்த முடியும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.