ஆழ்கடலில் வைத்து மீனவனின் உயிரைக்காவு கொண்ட மீன்!📸


ஆழ்கடலில் வைத்து மீன் குத்தி ஏற்பட்ட காயத்தினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,


கடந்த 24.06.2025ம் திகதியன்று ஆழ்கடலுக்கு தொழிலுக்காக படகில் சென்ற மூவர் நேற்று (29.06.2025) ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் பட்ட பெரிய மீனைத் தூக்குவதற்கு காலை 10.30 மணியளவில் முயற்சி செய்யும் போது தவறி கடலில் விழுந்தவரை மீனின் கொம்பு வயிற்றுப்பகுதியில் தாக்கி நிலையில் காயத்துடன் படகில் ஏறியவர் தனக்கு மீன் குத்தி விட்டதாகவும் நோவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


மற்ற இருவரும் அவரை கரைக்கு கொண்டு வரும் நோக்கில் வரும் வழியில் மதியம் 12 மணியளவில் அவரது உயிர் பிரிந்துள்ளது.


நேற்றிரவு 11 மணியளவில் இறந்தவரின் உடல் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை வந்தடைந்தது.


மரணமடைந்தவர் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் ரஹ்மானிய ஜும்ஆ பள்ளிவாயல் வீதியைச்சேர்ந்த 47 வயதுடைய மீராலெப்பை சஹாப்தீன் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.


இம்மரணம் தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸாரும் மீன்பிடித்துறைமுக கடலோரப்பாதுகாப்புப் படையினரும் நடாத்தி வருகின்றனர்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.