கடவுச்சீட்டு அலுவலகத்தில் புதிய டோக்கன் முறை!
கடவுச்சீட்டு சேவைகளுக்கான விண்ணப்பங்களை கையாள்வதில் புதிய நடைமுறையை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பத்தரமுல்லையில் உள்ள அதன் தலைமைக் காரியாலயத்தில், ஜூன் 2, திங்கட்கிழமை முதல், ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான டோக்கன்கள் காலை 6:30 மணி முதல் பி.ப. 2:00 மணி வரை வழங்கப்படும்.
ஒரு நாள் சேவைக்காக முன்பதிவு செய்தவர்கள் மற்றும் அவசரத் தேவைகள் உள்ளவர்கள் இந்த நேரத்தில் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
காலை 6:30 மணி முதல் பி.ப. 2:00 மணி வரை வரும் அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்படும் என்பதால், பொதுமக்கள் இரவு முழுவதும் அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வித சிரமங்களையும் தவிர்க்கும் பொருட்டு, விண்ணப்பதாரர்கள் காலை 6:00 மணிக்கு மேல் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த புதிய முறை கடவுச்சீட்டு விண்ணப்ப செயல்முறையை நெறிப்படுத்தவும், காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை