கெஹலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் விளக்கமறியலில்!

 பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குடும்பத்துடன் விளக்கமறியலில்.


முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


 இவர்கள் மூவரும் இன்று முன்னதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் அவர்களது சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து வாக்குமூலம் அளிக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன் ஆஜராகியிருந்தனர். அதன் பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.


கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி, அவர்களை ரூ. 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ரூ. 5 மில்லியன் பெறுமதியான 9 சரீரப் பிணைகளில் விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தார்.


எனினும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாத காரணத்தினால், கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.