மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு அபராதம்?


 மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் ​​விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்து பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திகா ஹபுகோட, இந்த செய்தி முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற தவறான செய்தி விளம்பரங்களை உருவாக்குபவர்கள் பதிவிடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தவறானது என்று இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ பக்கத்திலும் ஒரு குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.