SpaceX நிறுவனத்தின் சோதனைத் தளத்தில், Starship வெடித்து சிதறிய கனவு!
அமெரிக்காவின்(USA) தெற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள எலான் மஸ்க் தலைமையிலுள்ள SpaceX நிறுவனத்தின் சோதனைத் தளத்தில், Starship ரொக்கெட் வெடித்து சிதறியுள்ளது.
குறித்த சம்பவமானது, (18) இரவு இடம்பெற்றுள்ளது.
இரவு 11.00 மணியளவில் பரிசோதனைக்கு முன்னதாகவே "தொழில்நுட்ப சிக்கல்" ஏற்பட்டதாக SpaceX நிறுவனம் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டார்ஷிப் என்பது விண்வெளிப் பயணம் முதல் செயற்கைக்கோள் ஏவுதல் வரை பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நோக்கத்துடன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு வரும் ஒரு ரொக்கெட் ஆகும்.
இந்த வெடிப்பால் ஏற்பட்ட தீவிபத்தில், பணியாற்றிய ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை என்றும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை