‘முதலைகள் சூழ்ந்த’ தடுப்பு மையம் தயார் செய்த டிரம்ப்!


அமெரிக்காவில் சட்டவிரோதமாக தஞ்சம் புகுபவர்களுக்கு ‘முதலைகள் சூழ்ந்த’ தடுப்பு மையம் தயார் செய்த டிரம்ப்.

 

புளோரிடாவில் அமெரிக்க அரசு தயார் செய்து வரும் புலம்பெயர்ந்தோர் தடுப்பு மையத்தை அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் பார்வையிட்டார். சுமார் 3000 ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தங்க வைக்க அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் ‘அலிகேட்டர் அல்கொட்ராஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மியாமி நகரிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில், முதலைகள் மற்றும் மலைப்பாம்புகள் நிறைந்த மிகப்பெரிய சதுப்புநிலத்தில் இந்த மையம் அமைந்துள்ளது. வரிசையாகப் படுக்கைகள் அமைக்கப்பட்டு சங்கிலி இணைப்பு வேலியால் சூழப்பட்டுள்ள இந்த மையம் பார்ப்பதற்கே ஒரு சிறை போல காட்சியளிப்பதாக விமர்சிக்கப்படுகிறது. “இந்த மையத்தைச் சுற்றி காவலர்களாக முதலைகள் இருக்கின்றன” என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு சுமார் ரூ.4000 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.