யேர்மனி ஸ்ரீ நவசத்தி விநாயகர் ஆலய ஆடிப்பூரம்!📸

விசுவாசு வருடம் 2025 ஆடி மாதம்

28ஆம் தேதி ஆடி பன்னிரண்டாம் நாள் திங்கட்கிழமை ஆடிப்பூரமும் ,சதுர்த்தி திதியும் அமைந்துள்ளது மிகவும் விசேஷமான நாள் ஆகும்.


இந் நன்நாளில் விநாயக பெருமானுக்கும், அம்பாளுக்கும் விஷேட அபிஷேகம், பூஜைகள் என்பன இடம் பெற்று சுவாமிகள் திரு வீதி உலா வரும் காட்சிகளும் இடம்பெற்றன.


திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.