ஆலவாய் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆடி முளைகொட்டு விழா!📸


"ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற ஆன்றோர் வாக்கின்படி தமிழக விவசாயப்

பெருமக்கள் ஆடி மாதத்தில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வர். அவர்கள் தங்கள் வினை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு இயற்றுவர். அந்த வகையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தமிழ் மாதங்கள் அனைத்திலும் திருவிழாக்கள் நடைபெற்றபடியே இருக்கும். இந்த வகையில் சித்திரைத் திருவிழா, வைகாசித் திருவிழா ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழா ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக ஆடி மாதத்தில் நடைபெறும் முளைக் கொட்டுத் திருவிழா பிரசித்திப் பெற்றத் திருவிழாவாகும் இதில் அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள திருவிழாக்கள் நான்காகும். அவை ஆடி முளைக் கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா ஆகியனவாகும். இதில் ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவில் அம்மன் சன்னதி முன்னுள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் (28.07.2025 முதல் 05.08.2025 முடிய) திருவிழா சிறப்பாக நடைபெறும். இதில் அருள்மிகு மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் சிறப்பு நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திரு உலா காண்பார். நாதஸ்வரக் கலைஞர்கள் கொட்டு மேளம் எனும் சிறப்பு இன்னிசை மீட்டு அம்மனை சேர்த்தி சேர்பர், ஏழாம் திருநாள் அன்று (02.08.2025) இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவர் சந்நதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவமும் நடைபெறுகிறது விவசாயம் வளம் பெறவும், நாடு செழிக்கவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும்."


 


ஆடி முளைக்கொட்டுத் திருவிழா தொடங்குவதையொட்டி  ஜூலை 26ம்தேதி வாஸ்து பூஜையுடன் விழா தொடங்குகிறது ஜூலை 27ம்தேதி அன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டதும் மீனாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11.35மணிக்குள் (காலை 10.35 மணிக்கு மேல் 10.59 மணிக்குள்) அம்மன் சன்னதி முன் உள்ள கொடி மரத்தில் கன்னியா லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது .அதனை தொடர்ந்து கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து காலை அன்னை மீனாட்சி வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருள்கிறார் இரவு  இரவு 07.00 மணி ஆடி வீதியில் அன்னை மீனாட்சி சிம்ம வாகனத்தில் எழுந்தருள்கிறார். ஜூலை 28ம்தேதி ஆடிப்பூரம் அன்று காலை தங்க சப்பரத்தில் எழுந்தருளிகிறார் அன்று உச்சிகால பூஜையில் அம்மனுக்கும் உற்சவ அம்மனுக்கும் ஏற்றி இறக்கும் வைபவம் நடைபெறுகிறது இரவு 7 மணியளவில் தங்க கமல வாகனத்தில் அன்னை மீனாட்சி ஆடிவீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது ஜூலை 29ம்தேதி காலை தங்க சப்பரத்திலும் இரவு 7மணியளவில் காமதேனு வாகனத்தில் அன்னை மீனாட்சி ஆடி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது. ஜூலை 30ம்தேதி காலை தங்க சப்பரத்திலும் இரவு 7 மணியளவில் அன்னை மீனாட்சி வெள்ளி யானை வாகனத்தில் எழுந்தருளி ஆடிவீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது‌ ஜூலை 31ம்தேதி காலை 9மணியளவில் தங்கச் சாப்பரத்திலும் அன்று இரவு 7மணியளவில் வெள்ளி ரிஷபா வாகனத்தில் அன்னை மீனாட்சி ஆடி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 01ம் தேதி காலை 9மணியளவில் தங்கச் சாப்பரத்தில் வீதியுலா நடைபெறுகிறது அன்று மாலை 4 மணிக்கு சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை நடை பெறுகிறது. இதன் பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் முறையே வெள்ளி யானை, வெள்ளிக் குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஆவணி மூல வீதிகளில் வலம் வருகின்றனர் மாலை 6.30 மணிக்கு பழைய திருக்கல்யாண மண்டபத்தில் திருக் கயிலாய காட்சி நடைபெறுகிறது பின்பு இரவு 7 மணியளவில் அன்னை மீனாட்சி கீளி வாகனத்தில் எழுந்தருளி ஆடி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 02 ம்தேதி காலை தங்கச் சாப்பரத்திலும்  இரவு 7மணியளவில்  புஷ்ப பல்லக்கில் அன்னை மீனாட்சி எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வருகிறார். அதன் பின்னர் உற்சவர் சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. ஆகஸ்ட் 03ம்தேதி காலை 9மணியளவில் தங்கச் சாப்பரத்திலும் இரவு 8மணியளவில் அன்னை மீனாட்சி தங்க குதிரை வாகனத்தில் ஆடி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது ஆகஸ்ட் 04ம்தேதி காலை 9:30 மணியளவில் அன்னை மீனாட்சி சட்டத்தேரிலும் இரவு 7மணியளவில்‌‌ அன்னை மீனாட்சி அர்த்தநாரீஸ்வரர் திருக்கோலத்தில் ஆடி வீதிகளில் வீதியுலா நடைபெறுகிறது இரவு மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் சைத்தோபசாரம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 05ம் தேதி மீனாட்சியம்மன் கோயிலுக்குள் உள்ள பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது இரவு 7மணியளவில் கனக தண்டியலில் எழுந்தருளி மேளதாளம் முழங்க ஆடி வீதிகளில் உலா வந்து ஆடி முளைக்கொட்டுத் திருவிழா நிறைவு பெறுகிறது அனைவரும் தவறாது குடும்பத்துடன் கலந்து கொண்டு அன்னை மீனாட்சி ஆலவாய் அண்ணலின் திருவருளை பெறுக.


 ஆடி முளைகொட்டு திருவிழா 2025


✡️27/07/2025- கொடியேற்றம்,சிம்ம வாகனம்


✡️28/07/2025- ஆடிப்பூரம் (தங்க கமல வாகனம்)


✡️29/07/2025- காமதேனு வாகனம்


✡️30/07/2025- யானை வாகனம்


✡️31/07/2025- ரிஷப வாகனம்


✡️01/08/2025- கிளி வாகனம் (வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே)


✡️02/08/2025- பூப்பல்லாக்கு (மாலை மாற்றுதல்)


✡️03/08/2025- குதிரை வாகனம்


✡️04/08/2025- அர்த்தநாரீஸ்வரர் (வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே)


✡️05/08/2025- கனகதண்டியல்(சயன திருக்கோலம்)


✡️தினந்தோறும் ஒய்யாளி சேவை மற்றும் நாதஸ்வர கச்சேரி நடைபெறும். 

ஆடி வீதிகளில் அன்னை மீனாட்சி வலம் வருவார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.