புத்தளம் நகரில் பாதசாரிகள் நடைபாதை வியாபார நிலையங்களை அப்புறப்படுத்தல்!📸
புத்தளம் நகரில் பாதசாரிகள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில்
காணப்படுகின்றன கடைகள் மற்றும் நடைபாதை வியாபார நிலையங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தற்போது புத்தளம் மாநகர சபை ஆரம்பித்திருக்கின்றது.புத்தளம் மாநகர முதல்வர் ரின்ஷாட் அஹமட் அவர்களின் பணிப்பின் பேரில் புத்தளம் சமூக பொலிஸ் பிரிவின் ஒத்துழைப்போடு இந்நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதோடு இதற்கு ஒத்துழைப்பு வழங்காத வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
கருத்துகள் இல்லை