சூரியனுக்கு எதற்கு விளக்கு!!


இருந்தால் தலைவன் 

இறந்தால் இறைவன் 

இதுதான் ஒவ்வொரு 

இனமான தமிழனின் உணர்வு!


அவரின் கடமையை உணராதவரே

கயமையில் குளிப்பு!

அவரின் எண்ணங்களுக்கு

தீ மூட்ட தவிப்பு!


கண் முன்னே காத்தல் 

அழித்தல் செய்த கரிகாலன்!

மண்ணின் மாண்பினை 

காத்து மாவீரர் வழியே 

தன் வழியென ஒவ்வொரு 

சொல்லிலும் உதிர்த்த உத்தமன்!


செல்நெறி தவறாது 

அறமொழி அழியாது 

இறைக்கு நிகராய் 

இனத்தின் உயிராய் உதித்தவன்!

 

அந்தப் சூரிய பெருநெருப்பை

 எவன் மறைக்க முடியும்!

 எவனால் அணைக்க முடியும்!


அப்படி ஒரு ஆழம் தெரியாத 

ஆயிரத்தில் ஒருவனாய் 

அவதரித்தவன்! 


முப்படைகளை வழி நடத்தி

 எமக்கொரு நாடமைத்துக் 

காட்டியவன்! 

அந்த ஒளி அருகில் 

இல்லையேனும் உருவங்களில் 

உணரப்பட்டுக் கொண்டே இருக்கிறார்!


 அதை தடுக்கவா

 விளக்கு தூக்கி வருகின்றீர்கள்

 சுட்டெரிக்கும் சூரியனுக்கு 

எதற்கு விளக்கு!

அவரின் சிந்தனையை 

செதுக்கி எடுப்பதே 

உனது பொறுப்பு!

-நா.மனோ-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.