காஸாவில் உணவு விநியோகமாவு மூட்டைகள்!📸


 காஸாவில் உணவு விநியோக பகுதிக்கு அருகில் வழங்கப்பட்ட மாவு மூட்டைகளை மக்கள் எடுத்துச் செல்வதை இந்தப் படங்கள் காட்டுகின்றன!



காஸாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும், இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் இறந்துள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்திருந்தது.


ஜூலை 20 முதல் 93 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், காஸாவில் பட்டினி இல்லை என இஸ்ரேல் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது.



பல வாரங்களாக சர்வதேச அழுத்தம் மற்றும் பாலத்தீனப் பகுதியில் அதிகரித்து வரும் பட்டினியை தொடர்ந்து, உதவிப் பொருட்களை சமீபத்தில் விமானம் மூலம் அனுப்பி வைத்ததாக இஸ்ரேல் ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தமை மேலும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.