44 பேரின் உயிரைப் பறித்த வெள்ளம்!


சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெய்ஜிங் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் தொடங்கிய மழை திங்கட்கிழமை தீவிரமடைந்தது.


இன்றைய தினம் வரை பெய்ஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களைத் கடுமையாக மழை தாக்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


தலைநகருக்கு வடக்கே சில பகுதிகளில் 543.4 மிமீ வரை மழை பெய்துள்ளது. இதன் விளைவாக, அதிகாரிகள் 80 குடியிருப்பாளர்களை வெளியேற்றினர், அதே நேரத்தில் சாலை மற்றும் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு குறிப்பிடத்தக்க சேதத்தை சந்தித்தது. 322 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுளளது.


சீனாவின் கிழக்குப் பகுதியை புயலானது கன மழையுடன் நெருங்கியதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷங்ஹாய் நகரில் 280,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மியூன், யான்கிங் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் உயிரிழப்புகளைக் தடுக்க சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெரிய அளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார். மியுனில் நிலைமை ‘மோசமானது’ என்று பிரதமர் லி கியாங் தெரிவித்துள்ளதாக மாநில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


குடிமக்களை வீடுகளுக்குள்ளே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன மற்றும் வெளிப்புற சுற்றுலா நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன

மியுன் கவுண்டி மற்றும் ஹெபெய் மாகாணத்தின் எல்லைப் பகுதிகளில் கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது, வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டுள்ளன.


மின் கம்பங்கள் பல சாய்ந்துள்ளதுடன் பெய்ஜிங்கிலிருந்து வடகிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தைஷிதுன் நகரில், வீதிகள் தண்ணீராலும் சேற்றாலும் மூடப்பட்டுள்ளன ஹெபெய் புயலுக்கு 50 மில்லியன் யுவான் ஒதுக்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உயர்மட்ட அவசரகால மேலாண்மை குழுவை அனுப்பியுள்ளதாகவும் சீன மத்திய அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.