ராஜித சேனாரத்னவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வுத் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை