வீதியில் செல்வோரைப் பொலிசார் துரத்தி (chase) பிடிக்கலாமா?


வீதியில் செல்வோரைப் பொலிசார் துரத்தி (chase) பிடிக்கலாமா என்பது அவர்கள் அந்த நபரை ஏன் துரத்துகிறார்கள் என்பதில்தான் தங்கியுள்ளது. இதை சட்டரீதியாகப் பார்க்கலாம்:


பொலிசாருக்கு ஒருவரைத் துரத்திப் பிடிக்கும் சட்ட அனுமதி உள்ள சூழ்நிலைகள்:


1. குற்றஞ்செய்த நபர் அல்லது சந்தேகநபர் என்று தெரிந்துள்ளபோது.


ஒருவர் குற்றம் செய்தார் அல்லது குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிசாரால் பிடிக்கப்படவேண்டியவர் எனக் கருதப்படும்போது.


Warrent இல்லாமல்ப் பிடிக்க அனுமதியுள்ள தடுப்புப் பிடிப்பு (arrest without warrant) சட்டத்தின்படி (Code of Criminal Procedure Act, s.32)பொலிசாருக்கு அவரை துரத்தி பிடிக்க உரிமை உண்டு.


2. வீதியில் நின்று மறிக்கும் போது நிறுத்தாமல் தப்பிச் சென்றால்

அது சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால் துரத்தி பிடிக்கலாம்.


3. சட்டவிரோத பொருட்களுடன் இருப்பது பற்றி தகவல் கிடைத்திருந்தால் உதாரணமாகப் போதைப்பொருள், ஆயுதம் போன்றவை இருப்பதாக நம்பிக்கையுடன் இருப்பின்,


பொலிசாருக்கு search and seizure அதிகாரம் உண்டு.


பின்வருவோரைச் சாலையில் துரத்திப்பிடிக்க முடியாது...


1. வழக்கமான முறையில் சாலையில் செல்வோர்


ஒருவர் வழக்கமான முறையில் சாலையில் நடக்கிறாரோ, பைக்கில் அல்லது காரில் செல்கிறாரோ என்றால்,அவரிடம் குற்றச்சாட்டு, சந்தேகம் ஏதும் இல்லாமல் துரத்துதல் என்பது மனித உரிமை மீறல் மற்றும் அத்துமீறல் ஆகும்.


2. தவறான அடையாளம், சாதி, சமூக அடிப்படையில் துரத்துதல் ஒருவரது தோற்றம், ஆடைகள், அல்லது சமூக அடிப்படையில் துரத்துதல் கடுமையாகக் குற்றம்.


உங்கள் உரிமை:


பொலிசார் தாங்கள் ஏன் துரத்தினார்கள், பிடித்தார்கள் என்பதற்கான காரணம் கேட்கும் உரிமை உங்களுக்கு உண்டு.


சட்டம் பின்பற்றப்படவில்லை என்றால், போலிசாரின் நடந்துகொள்ளல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடலாம்.


தவறான பிடிப்பு அல்லது தாக்குதல் நடந்தால், கொள்கைமீறலுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.


இத்தோடு தொடர்புடைய சட்டங்கள்:


Code of Criminal Procedure Act (No. 15 of 1979)


Police Ordinance


Penal Code


Constitution of Sri Lanka – Article 13 (Freedom from arbitrary arrest)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.