கூட்டத்தில் பெய்ரா ஏரி Sea plane நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு!
உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, கொழும்பு பெய்ரா ஏரியை Sea plane விமான நிலையமாக செயற்படுத்துவது குறித்த கலந்துரையாடல் பாதுகாப்புச் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா (ஓய்வு) தலைமையில் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்றது
சாஃப்ரான் ஏவியேஷனின் கீழ் உள்ள சினமன் ஏர், இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளவுள்ளது.
கூட்டத்தில் பெய்ரா ஏரி Sea plane நடவடிக்கைகளுக்கான பாதுகாப்பு பரிசீலனைகள், புறப்படுதல் மற்றும் தரையிறங்கும் நடைமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை பொறுப்புடன் நிவர்த்தி செய்ய வேண்டிய அவசியம் உள்ளிட்ட பல முக்கியமான விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன. இந்த திட்டத்தின் வெற்றி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக அனைத்து பங்குதாரர்களிடையேயும் பயனுள்ள ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
குறித்த முன்னேற்ற திட்டத்தை மதிப்பாய்வு செய்வதற்கும் செயல்படுத்தலின் போது எழக்கூடிய எந்தவொரு சவால்களையும் நிவர்த்தி செய்வதற்கும் இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் மீண்டும் ஒரு கூட்டத்தை கூட்டவும் அவர் முன்மொழிந்தார்.
இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படை, விமானப்படை, காவல்துறை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, நகர அபிருத்தி அதிகார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை துறைமுக அதிகார சபை, ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் சாஃப்ரான் ஏவியேஷன் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை