யார் இவர்கள்?
1.நேற்று முன்னாள் போராளிகள் என பங்குகொண்டதாக சொல்லும் 100வரையான முன்னாள் போராளிகள் எனச்சொன்ன ஒருவருக்குக்கூட இறுதியில் தலைவன் எங்கே இருந்தார் என்றோ என்ன நடந்தது என்றோ எனத்தெரியாதவர்கள்.
2.சிலர் தலைவனின் மெய்ப்பாதுகாவலராக இருந்ததாகக்கூட சொல்வார்கள் மெய்ப்பாதுகாவலன் தலைவரை காப்பாற்றாமல் ஒருபோதும் தப்பி வருவதில்லை.
3.பலர் இறுதி நேரத்தில் அந்தந்த படையணி தலைமையின் தொடர்புக்கு போகாமல் வோக்கியை ஓவ் செய்துவிட்டு குடும்பத்தோடு சரணடைந்தவர்கள்.
4.சிலர் இந்தியாவுக்கு முன்னாள் போராளிகளென சொல்லி இந்தியாவுக்குப்போய் ஜெய் கிந் பாரத் மாதாஜே சொல்லி கையை தூக்கிட்டு ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்த அணியை இயக்குவோர்.
5.சிலர் புலிகளின் கட்டமைப்புக்களில் ஊதியம்பெற்று பணியாற்றியவர்கள்
6.இதுவரை தேசித்தலைவரால் உருவாக்கப்பட்டு எல்லா நாடுகளிலும் மாவீரர் நாள் உட்பட்ட நினைவேந்தலை நடாத்திவரும் TCC தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை
பலவீனப்படுத்த பெரும்பாலான நாடுகளில் அரசியல்துறை என புதிய கட்டமைப்புக்களை 90ஆம் ஆண்டுகாலப்பகுதியில் விலகிய 10-15 பேருடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் உருவாக்கியோரே இந்த நிகழ்வுக்கும் பின்னணியில் இருக்கிறார்கள்.
புலிகள் அமைப்பிலிருந்து விலகியவர்கள் ஒருபோதும் புலிகள் அமைப்பு தொடர்பாக எந்த முடிவும் எடுப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை அதுதான் நடைமுறை.
புலத்திலும் தாயகத்திலும் வருடாந்தம் மாவீரர் நினைவேந்தல் செய்யும் எந்த கட்டமைப்பும் ஆதரவாக இல்லை. இது மே 18 இனவழிப்பாக இருந்ததை மடைமாற்றும் வேலையாகவே பார்க்கப்படுகிறது.
எதிரியே இனி சொல்லுவான் மே 18 இனவழிப்பு நாளில்லை அது பயங்கரவாதத்தை ஒழித்த நாளென
பெரும்பாலான ஆதரவாளர்கள் இப்படியான உணர்வுபூர்வ விடையங்களில் குழப்பங்கள் செய்யக்கூடாது என்பதற்காகவே அமைதியாக இருந்தார்கள்,இருக்கிறார்கள் அதற்காக பொலீசாரை பாதுகாப்பைக்கு அழைத்து தொடர்ந்தும் உங்கள் கூத்துக்களை செய்யலாம் என நினைப்பது தவறு.
இந்த ஏற்பாட்டளர்களின் முதன்மையாளர் ஒருவார் படையணி தளபதியாக இருந்தவர் அண்மையில் பேட்டி கொடுத்தபோது கேட்கப்பட்டபோது தலைமை சரணடையச்சொன்னதா என ...பதில் இல்லை அப்படி சொன்னதாக நான் அறியவில்லை அப்படியானால் இலட்சியத்தை கைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். இவர்களின் எதிர்காலத்திட்டம் என்னவோ?
நன்றி :- பகலவன்.
கருத்துகள் இல்லை