சுமந்திரன் கஜேந்திரகுமார் அவர்களோடு இணைய விரும்புவதில்லை.!

 


கஜேந்திரகுமார் சுமந்திரன் தரப்புடன் இணைந்து பணியாற்ற பலதடவை விருப்பம் தெரிவித்திருந்தும் சுமந்திரன் கஜேந்திரகுமார்

அவர்களோடு இணைய விரும்புவதில்லை.


இது ஏன் என்று யாராவது சிந்தித்தீர்களா??


இதற்கான பதில் அது தான் இந்திய இலங்கை அரசுகளின் நிகழ்ச்சி நிரலாகும்.


1.) இலங்கை இனப்படுகொலை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றில் பாரப்படுத்தப்படாமல் தடுத்து இலங்கையை பாதுகாப்பது


2.) அதையும் மீறி ஐநா பாதுகாப்புச்சபையோ அல்லது ரோம் சாசன உறுப்பு நாடுகளோ சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்தினால் இனப்படுகொலை குற்றத்தை நிரூபிக்க விடாது தடுத்து இலங்கையை பாதுகாப்பது


3.) இலங்கைப் பிரச்சினையை ஐநா மனித உரிமை ஆணையதை விட்டு வெளியே எடுக்க விடாது அதற்குள்ளேயே தொடர்ந்தும் வைத்திருப்பதுடன் உள்ளக விசாரணைப் பொறிமுறைக்கு சம்மதித்து அதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி அவற்றை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு கால அவகாசத்தை வழங்குவன் பேரில் காலத்தை மேலும் மேலும் இழுத்தடிப்பது.


இந்த மூன்றுமே இந்திய இலங்கை அரசுகளால் சுமந்திரனுக்கு கொடுக்கப்பட்ட பணியாகும்.


தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உதவியுடனே மகிந்தவை மின்சாரக் கதிரையிலிருந்து காப்பாற்றினேன் என நல்லாட்சி அரசின் காலத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை இங்கே குறிப்பிடக் கூடியது.


ஆனால் கஜேந்திரகுமார் அவர்கள் சுமந்திரனின் இந்த மூன்று பணிகளுக்கும் எதிராக செயற்படுவதுடன் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த தன்னால் முடிந்தளவு முயன்று வருகின்றார்.


" யுத்தம் நடைபெறும் போது மக்கள் அகப்பட்டு கொல்லப்படுவது என்பது இராணுவத்தின் கொலைக் குற்றமாகாது. அதாவது மனித உயிரை போக்கிய குற்றம் கொலையாக இராணுவத்தின் கொலையாக பார்க்க முடியாது. அதாவது இராணுவத்தின் நோக்கம் ஒரு போதும் மக்களை கொல்வதல்ல. பு லி க ளை அ ழி ப் ப தே. பஸ்ஸில் வேண்டுமென்றே ஒருவர் அடிபட்டு இறந்தால் சாரதி கொலைக்குற்றவாளி அல்ல. இதேபோல யுத்த பகுதியினுள் மக்கள் மரணித்தமையால் இராணுவம் கொலைக்குற்றவாளிகள் அல்ல. எனவே இனப்படுகொலைக்கான ஆதாரங்கள் இல்லை. எனவே இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியாது."


இது தான் சுமந்திரனின் சட்ட புலமை கண்டு பிடித்த இலங்கை அரசை காப்பாற்றுவதற்கான வழியும் வாதமும்..


ஆனால் கஜேந்திரகுமார் சுமந்திரனின் சட்ட புலமைக்கு ஆப்பு வைக்கக்கூடியவர் என்பது அவருக்கு நன்கு தெரியும். அதனாலேயே கஜேந்திரகுமாரை கண்டால் சுமந்திரன் தலைதெறிக்க ஓடுகிறார்.


இன்னொருவகையில் சொன்னால் அரசின் இனப்படுகொலைக்கு முக்கிய சாட்சியாக மாறி குற்றத்தை நிரூபிக்கக்கூடிய இடத்தில் கஜேந்திரகுமார் இருக்கிறார்.


எப்படியென்றால் இறுதி யுத்தத்தில் இறுதி நேரத்தில் பு லி க ள் தரப்போடும் அரச தரப்போடும் பேச்சுவார்த்தை நடத்தியவர்களுள் கஜேந்திரகுமார் தான் முதன்மையானவர்.


பு லி க ள் அப்பாவி மக்களை காப்பாற்ற இறுதி நேரத்தில் அரச தரப்போடு பேச முனைந்து மக்களை வெளியேற்றுவற்கு இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள கஜேந்திரகுமார் அவர்கள் ஊடாக பெசில் ராஜபக்சவிடம் கோரிய போது முதலில் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்த அரச தரப்பு வெளிநாட்டிலிருந்து மகிந்த ராஜபக்ச இலங்கைக்கு வந்தவுடன் குத்துக்கரணம் அடித்து பேச்சுவார்த்தைக்கு வரமறுத்தது.


அத்துடன் யுத்தத்தை தீவிரப்படுத்தி அத்தனை மக்களையும் மகிந்த அரசு இனப்படுகொலை செய்தது. லட்சக்கணக்கான மக்கள் யுத்த வலயத்தில் உள்ளார்கள் என்று தெரிந்தும் பல்லாயிரம் மக்கள் கொல்லப்படுவார்கள் என்று தெரிந்தும் அதனை யுத்தத்தில் ஈடுபட்ட மற்ற தரப்பே மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுங்கள் கேட்டும் எதனையும் கவனத்தில் கொள்ளாமல் அரசு யுத்தத்தை முடுக்கி விட்டது.


யுத்தத்தின் இறுதி நாளில் மட்டும் கிட்டத்தட்ட நாற்பதினாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்ப் பட்டமையானது வேண்டுமென்றே திட்டமிட்டு மக்கள் மீது செய்யப்பட்ட இனப்படு கொலையாகும்.


மக்கள் கொல்லப்படுவார்கள் என்று தெரந்தே இராணுவம் யுத்தம் புரிந்தமையால் இராணுவத்தின் நோக்கம் மக்களை கொல்வதுதான்.. எனவே இந்த இலங்கை இராணுவம் இனப்படு கொலைக் குற்றவாளிகள். என நிருபணமாகின்றது.


இதற்கான நேரடி சாட்சியாக கஜேந்திரகுமார் உள்ளார். எங்கே இலங்கையை குற்றவியல் கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் தான் சுமந்திரன் கஜேந்திரகுமாரை கண்டாலே அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்.


ஆனால் காலம் சுமந்திரனுக்கு தக்க பதிலை சொல்வதுடன் கொல்லப்பட்ட ஆத்மாக்களுக்கு நீதியை பெற்றுத் தராமல் ஓயாது.


விதி தான் வலிமை மிக்கது..


-ஈழமாறன்-

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.