இருவர் மீது இரானுவ ட்ரக் வண்டி மோதியதில் இருவர் பலத்த காயம்!
தம்பாளையில் வீதியில் நெல் காயவைத்துக்கொண்டிருந்த இருவர் மீது இரானுவ ட்ரக் வண்டி மோதியதில் இருவர் பலத்த காயம்.
தம்பாளை தலபத்தாறு பகுதியில் நடந்த வாகண விபத்தில் இருவர் பலத்தகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
தமது வயலில் அறுவடை செய்த நெல்லை வீதியில் காய வைத்துகொண்டு இருந்த இருவர் மீது இலங்கை இராணுவ ட்ரக் லாரி ஒன்று மோதியதில் அவ்விருவரும் பலத்த காயங்களுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் வாய்பேச முடியாத விஷேட தேவையுடைய சமீம் என்ற நபரும், தம்பாளையில் வசிக்கும் சுங்காவில் கபூர் எனவும் அடயாளம் கானப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை புலஸ்த்திபுர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல்: பௌமியா ஆசிரியை (தம்பாளை)
கருத்துகள் இல்லை