உடன் நடவடிக்கையெடுப்பார்களா சிறிலங்கா காவல்துறை.!


திருகோணமலை நிலாவெளி பிரதேசத்திற்கு உட்பட்ட (10-ம் கட்டை என அழைக்கப்படும் ) கோபாலபுரம் பகுதியில் 11.08.2025 அன்று மாலை 5:00 மணியளவில்  இரு குழுக்கள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.


குழுவாக வந்த முஸ்லீம் இளைஞர்கள்  தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்தி வாள் வெட்டும் செய்து மோட்டார் சைக்கிளால் ஏற்றியும் உள்ளனர்.


சம்பவத்தில்  படுகாயமடைந்த 

ஒருவர் திருகோணமலை பொது  வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...


சிகிச்சை பெற்று வருபவர் 33வயதுடைய வில்வராசா விஜயபாஸ்கர் எனும் இளைஞராவார்


பொது மக்கள்  பொலிசில் முறைப்பாடு செய்தும் இதுவரையில்  யாரும் கைது செய்யப்படவோ விசாரணைக்கு உட்படுத்தப்படவோ இல்லை  என மக்கள் குற்றச்சாட்டு...

(தகவல் கோபாலபுரம் பொது மக்கள்)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.