தாகம் நீ..!

 


வானம் நீ பூமி நான்

வருவது எப்போது?


தூரம் நீ துயரம் நான்

துடைப்பது எப்போது?


தாகம் நீ தனிமை நான்

தணிப்பது எப்போது?


பாசம் நீ பாவம் நான்

பார்ப்பது எப்போது?


ஆசை நீ ஆவல் நான்

ஆறுதல் எப்போது?


காலம் நீ காதல் நான்

கனிவது எப்போது?

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.