சூர்யா 46'-ல் இணைந்த சூரி பட ஹீரோயின்!📸


'சூர்யா 46'-ல் சூரி பட ஹீரோயின் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா கைவசம் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியின் 'கருப்பு', தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி படம் ஆகிய 2 படங்கள் இருக்கிறது.


இதில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் நடிக்கின்றனர். இது சூர்யாவின் 46-வது படமாம். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


இதனை 'சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் - FORTUNE FOUR சினிமாஸ் - ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்' ஆகிய நிறுவனங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்தில் முக்கிய வேடத்தில் 'விடுதலை' புகழ் பவானி ஶ்ரீ நடிப்பதாக சொல்லப்படுகிறது

.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.