கலென்பிந்துனுவெவ பகுதியில் 5000 இந்கும் மேற்பட்ட T-56 துப்பாக்கி ரவைகள்!📸
கலென்பிந்துனுவெவ பகுதியில் கட்டலாவ ஏரியில் இருந்து நேற்று (13) 5000 இற்கும் அதிகமான T56 ரக துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் போது குறித்த ரவைகள் கண்டெடுக்கப்பட்டன.
கெடலாவ ஏரியிலிருந்து நீர் வெளியேறுமிடத்திலுள்ள சேற்றில் துப்பாக்கி ரவைகள் கிடப்பதைக் கண்ட ஒருவர் பொலிஸாருக்குத் தகவல் அளித்தார்.
எனவே, கெடலாவ ஏரிக்கு அருகில் மேலும் துப்பாக்கி ரவைகள் இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிப்பதுடன் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை