யாழில் இந்திய துணைத் தூதரகத்தில் 79ஆவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்!📸
யாழ்ப்பாணம் – இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று (15) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரக வளாகத்தில் காலை 9.00 மணிக்கு துணைத் தூதுவர் சாய் முரளி அவர்கள் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், இந்திய குடியரசுத் தலைவர் திரு. திரௌபதி முர்மு அவர்களின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.
நிகழ்வில் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டு, இந்திய விடுதலை வீரர்களை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தினர்.
தேசியக்கொடி அசைவுடன், தேசபக்தி பாடல்கள் ஒலிக்க, நிகழ்விடம் ஒரு சிறப்பான நாட்டுப்பற்றுக் களம் உருவானது.
கருத்துகள் இல்லை