பாடசாலை மாணவி மரணம்!!
பதினொரு வயதான பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கெக்கிராவையில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போதே குறிந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உடனடியாக கெக்கிராவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரேத பரிசோதனை செய்த போதிலும் மரணத்திற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
இதன் விளைவாக, உடல் மாதிரிகள் மேலதிக பகுப்பாய்விற்காக மருத்துவ பரிசோதகருக்கு அனுப்பப்பட்டு, திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், சிறுமியின் உடல் அவரது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை