ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி!
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க அத தெரணவிடம் தெரிவித்தார்.
இன்று முன்னதாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட விக்ரமசிங்க, பலத்த பாதுகாப்புடன் சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் வந்த பிறகு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (நியூஸ்வயர்)

.jpeg
)





கருத்துகள் இல்லை