Mr Clean னும் சிதைக்கப்பட்ட அரைநூற்றாண்டுகால அரசியல் பண்பும்!
1991 – 1993 காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா கட்சிக்குள்ளும், வெளியிலும் கடுமையான நெருக்கடிகளை சந்த்தித்திருந்தார்.
லலித் அத்துலத் முதலி, காமினி திஸ்நாயக்க உள்ளிட்ட ஐக்கியதேசியக் கட்சியின் பெரும் தூண்கள் அவருக்கு எதிராக நாடாளுமன்றில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வந்த காலம் அது.
அப்போது தன்மீதான கடுமையான குற்றச்சாட்டுக்கள், விமர்னங்களை எதிர் கொண்ட அவர் தன்னுடைய சிறப்பியல்புகளை, பண்புகளை சிதைத்துவிட வேண்டாம் – அழித்துவிட வேண்டாம் (Distorting the characterization - Undermining the characterization - Damaging the characterization) என தனது எதிராளிகளிடம் மன்றாடியமை இன்று திடீரென ஞாபகத்திற் வந்தது.
ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் மருமகனாக, அவரது அரசியலின் தொடர்ச்சியாக, ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சியில் அவருடன் இணங்கிச் சென்று தனது இருப்பை தக்க வைத்தவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
தனது 48 வருடகால அரசியல் வாழ்வில் ஏறத்தாள அரை நற்றாண்டு கால அரசியல் வாழ்வில், பேணிப் பாதுகாத்த அரசியல் பண்பு - Political characteristic (போலியானதா? உண்மையானதா என்ற விவாதங்கள் தொடர்கின்றன) – இப்போ சிதைக்கப்பட்டிருக்கிறது. அல்லது அழிக்கப்பட்டிருக்கிறது. (Political character has been destroyed.)
Mr clean என உள்நாட்டிலும், சர்வதேச அரசியல் ராஜதந்திர மட்டத்திலும், அவர் எந்த அளவிற்கு போற்றப்பட்டார் – மதிக்கப்பட்டார் என்பதனை மற்றயவர்களை விட அவர் மட்டுமே உணர்ந்திருப்பார்.
அதனால் சிறிய குற்றமோ, பெரிய குற்றமோ, அல்லது சிறிய ஊழலோ, பெரிய ஊழலோ என்பதற்கு அப்பால் தன் அரசியல் வாழ்வை - Mr clean ஐ தற்போதைய குற்றச்சாட்டு அழித்து விட்டது என்பதனை அவரது விசுவாசிகளை விட அவர் உணர்ந்திருக்கிறார்.
அதுவே அவரது உடல் ஆரோக்கியத்தை நிலைகுலைய வைத்திருக்கிறது. இதயைத்தை அடைத்திருக்கிறது.
எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்த எளியவர் ஒருவர் (அனுர) றோயலிஸ்ட்டை நீதிமன்றில் நிறுத்தி கையில் விலங்கிட வைத்த அரசியல் அதிர்ச்சியில் இருந்து அவரால் மீண்டு வர முடியவில்லை.
சர்வதேச மட்டத்தில் அவருக்கு வரவிருந்த வாய்ப்புகள், கௌரவ அந்தஸத்துகள் யாவும் நீதிமன்ற தீர்பால் தகர்ந்து போயின அல்லது கேள்விக்குள்ளாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவை சமாதானப்படுத்த, ஆறுதல் கூற அவரது அனுதாபிகள், நலன் விரும்பிகள் மராடிக்கலாம். ஆனால் தனது தவறும் அதனால் ஏற்பட்ட விளைவும் தன் அரசியல் வாழ்வில் மீளமுடியாத துயர் என்பது அறிவும் அனுபவமும் உடைய ரணில் விக்கிரசிங்கவுக்கு புரியாதது அல்ல.
#ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist #RanilWickremesinghe #நடராஜா_குருபரன்

.jpeg
)





கருத்துகள் இல்லை