UNPகட்சியை ரணிலின்பின் சுமந்திரன் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது!


காரணம் இலங்கை தமிழரசு கட்சியில் மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியலிலும் தனது செல்வாக்கை இழந்திருக்கும் திருவாளர் சுமந்திரன் அவர்கள்,சரிந்துவிட்ட தனக்கான மக்கள் செல்வாக்கை இனியும் தன்னால் மீளப்பெறமுடியாது என்ற முடிவோடு,இலங்கையின் ஐக்கிய தேசிய கட்சியில் தன்னை இணைத்து அதன் யாழ்மாவட்ட வேட்பாளராக வருவதற்கு 90%சாத்தியங்கள் இருப்பதாக சில நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதற்கு ஆதாரமாக யாழ்மாவட்டத்தில் உள்ள இலங்கை முஸ்லிம்களோடு அவர் கைகோர்த்து அவர்களின் வாக்குகளை தனக்காக இப்பவே தயார்படுத்திவருவதாகவும் அறியமுடிகின்றது.இதேபோன்று ஏனைய மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களுடனும் இவர் நல்லுறவை பேணிவருவதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.


ஒரு தமிழனாக தான் பிறந்த மண்ணில் வாழ்வதற்கு விரும்பமுடியாதவர்களாக,தகுதியில்லாதவர்களாக யார் யார் சுமந்திரன்போன்று சிந்திக்கிறார்களோ அவர்கள் யாராயினும் அவர்களுக்கு தோதான கட்சிகளில் இணைந்து பயணிப்பதே தமிழருக்கும் பெரும் நன்மையாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.