பயங்கர வாதிகளுடனான மோதலில் ஒருவர் உயிரிழந்தார்!


 ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாதுகாப்பு படைவீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர், போலீசாருடன் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர்.


அப்போது ராணுவ வீரர் பலத்த காயம் அடைந்து வீரமரணம் அடைந்தார். மேலும் இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் வனப்பகுதியில் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.


காஷ்மீரில் பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் ஸ்ரீநகர், பாரமுல்லா, அனந்த்நாக், குப்வாரா, புல்வாமா மற்றும் ஷோபியன் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 இடங்களில் ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் சோதனை நடத்தினர். சமூகவலைதளம் வாயிலாக பங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக வந்த புகார் அடிப்படையில் சோதனை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.