சிறாலங்கா அரசையும் இனவழிப்புச் செய்த படைகளையும் பாதுகாக்கிற நிகழ்ச்சி நிரலான இ. அர்ச்சுனா!

 


பிரபாகரன் குண்டுவைத்தாராம் 

இவர் அதற்கு மன்னிப்புக் கோருகிறாராம்

ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு போகப்போறாராம் அங்கேயும் போய் பிரபாகரன் குண்டு வைத்ததார் என்று சொல்லி மன்னிப்புக் கேட்கப்போறாரோ. 

அல்லது 

கட்டிலுக்கடியில இருந்தவர்களை பாதுகாத்த இராணுவத்துக்கும் தலைவர்களுக்கும் எதிராக வழக்குப்போடுகிறார்கள் எண்டு முறையிடப்போறாரோ


கட்டிலுக்கடியிலிருந்தவர்கள் இன்று ஜீஸ்சு போட்டு பார்லிமன்னுக்கு வரக்காரணமான தலைவர்களது உரிமைகளை அனுர பறிச்சிட்டாரெண்டு முறையிடப்போறாரோ 


அப்பிடியான தலைவர்களின்ர மகன் நாமலை குடு நாமல் என்று கிண்டலடிக்காறார்கள் அந்தப் பாராளுமன்றத்தில என்னால் இருக்கேலாது ஐநா மனித உரிமைகள் பேரவையில ஒரு கதிரை தரச்சொல்லி கேட்கப்போறாரோ 


அல்லது 27 ஆம் ஆண்டு நாமல்ராசபக்சேவை சனாதிபதியாக்குற வேலைத்திட்டத்தை தாங்கள் ஆரம்பிச்சிட்டோமெண்டு ஐநாவுக்கு சொல்லப்போறாரோ 

அல்லது 

தலைவர் பிரபாகரனோடு ஒப்பிடேக்குள்ள டக்களஸ் மேலானவர் துணிந்தவர் எண்ட தனது நிலைப்பாட்டினை ஐநாவுக்குச் சொல்லலப்போறாரோ


இனப்படுகொலை செய்து புலிகளை அழித்து வென்றதன் அடையாளமாக தமிழரது காணிகளை ஆக்கிரமித்து தையிட்டியில் சிங்கள இராணுவம் கட்டின வடக்கின் அதிஉயரமான விகாரையை இடிக்கக் கூடாதென்று யாழ் கச்சேரியில் சனாதிபதி அனுரவுக்கு முன்னால வக்காளத்து வாங்கின நிலைப்பாட்டை ஐநாவில மீளவலியுறுத்தப்போறாரோ

அல்லது 

சிறீலங்கா அரசு (state) பரிசுத்தம் ஆட்சியிலுள்ள அரசாங்கத்தின் (Government) அணுகுமுறை மட்டும்தான் பிரச்சினை என்று சிறீலங்கா அரசை பிணை எடுக்கப்போகிறாரா?


அல்லது 

அரசும் பரிசுத்தம் அரசாங்கமும் பரிசுத்தம் ஆனால் வடக்கு கிழக்கில கடமையாற்றுகிற அரச அதிகாரிகளது ஊழல் மட்டும்தான் பிரச்சினை ஆனாலும் வரும் 27 இல் நாமலை சனாதிபதியாக்கி அனைத்தையும் சரிசெய்துவிடுவோம் என்று சொல்லப்போறாரோ. 


சுமந்திரன் எதிர்கிறமாதிரி நன்றாக நடித்து இருவரும் சிறாலங்கா அரசையும் இனவழிப்புச் செய்த படைகளையும் பாதுகாக்கிற நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக முன்னகர்த்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.