காஸா உள்ளே இறங்கும் இஸ்ரேல் படைகள்!📸
காஸாவின் பல இடங்களுக்குள் முழு வீச்சில் நுழைய தங்கள் படைகள் தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. காஸாவை விட்டு அதிகப்படியான மக்கள் வெளியேறுவதற்கு, தெற்கு பகுதியில் மேலும் ஒரு புதிய பாதையை 2 நாட்களுக்கு திறந்து வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் விமானப்படை மற்றும் பீரங்கிகள் காஸாவை 150க்கும் மேற்பட்ட முறை தாக்கியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல்களால் அங்குள்ள தொலைப்பேசி மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதால், அங்குள்ள மக்கள் அவசர உதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காஸாவில் இறப்பு எண்ணிக்கை 65,000ஐ தாண்டியதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.







.jpeg
)





கருத்துகள் இல்லை