விழிப்புணர்வு"சமூக சக்தி" தேசிய வறுமை ஒழிப்புத்திட்ட நிகழ்ச்சி!📸


ஜனாதிபதியின் எண்ணக்கருவில் அமைந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமான வறுமை ஒழிப்பு செயற்றிட்டத்தின் "சமூக சக்தி" வேலைத்திட்டம் தொடர்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (18)  

நடைபெற்றது.


குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


அரசாங்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் தேசிய அளவிலான திட்டங்களில் பொருளாதார அபிவிருத்தியின் நன்மைகள் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிடையேயும் சமமாக பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதி செய்தல், கிராம மக்கள் மூலமாகவே கிராமப்புறங்களை முழுமையான அபிவிருத்திக்கு இட்டுச் செல்வதே சமூக சக்தி திட்டத்தின் நோக்கமாகும்.


இதன்போது சமூக வலுவூட்டல் மூலம் வறுமை ஒழித்தல் என்னும் தொனிப்பொருளில் இவற்றை செயற்படுத்தவுள்ள சமூக அபிவிருத்திக் குழுவின் சட்ட அடிப்படை, ஆக்க அமைவு, ஸ்தாபிப்பு மற்றும் பணிகள் தொடர்பில் தெளிவான விளக்கங்கள் சமூக சக்தி செயலகத்தின் பணிப்பாளர் புத்திக ஜெயதிஸ்ஸ அவர்களினால் அதிகாரிகளுக்கு தெளிவூட்டப்பட்டன.


இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரதீப் தனபால, மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் , பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.