தென்மராட்சி அபிவிருத்தி குழு கூட்டம்!📸


தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டம்19.09.2025வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரதேச செயலர் சத்தியசோதியின் ஏற்பாட்டில்-பாராளுமன்ற உறுப்பினரும்-பிரதேச அபிவிருத்தி மற்றும ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான க.இளங்குமரன் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.


இதன்போது கல்வி சார்ந்த பிரச்சனைகள்,சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள்,பொலிஸ் சேவையுடன் தொடர்புடைய பிரச்சனைகள்,வீதி செப்பனிடல் தொடர்பான பிரச்சனைகள்,வன வள திணைக்கள ஆக்கிரமிப்பு, வைத்தியசாலைகளின் வளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.


கலந்துரையாடலில் சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர்,பிரதேசசபைத் தவிசாளர்,உப தவிசாளர்கள் ,உறுப்பினர்கள்,திணைக்கள தலைவர்கள்,இராணுவத்தினர்,பொலிஸார்,பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.