யாழில் பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்தியவர் மாபெரும் மாபியா!
தென்னிலங்கை தேசிய கட்சியில் கடந்த தேர்தலில் போட்டியிட்ட இந்த நபர் அரச உத்தியோகத்தர் இல்லை. மனைவி ஆசிரியர். பிள்ளை கிளிநொச்சி திரேசா பெண்கள் பாடசாலையில் கல்வி கற்கின்றார்.
கிளிநொச்சி திரேசா பெண்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர்.
தனியார் வாகனத்திற்கு அரச இலட்சினை... இதே பெரிய மோசடி..... கதை வேற
(யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்தியவர் பாரிய மண்கடத்தல்காரண் பல அரசு அதிகாரிகளின் துணையுடன் பாரிய ஊழல் புரிபவர் கிறிஸ்தவ சபைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்
யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்தி நபர் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட கிழவன்குளம் பகுதியில் வசிப்பவர். சுப்பையா திருச்செல்வம் எனும் இவர் பலருக்கும் இலஞ்சம் வழங்கி பாரிய மண்கடத்தலில் ஈடுபடும் ஒருவர் இதனைவிட பல அரசு அதிகாரிகளின் துணையுடன் பல்வேறு ஒப்பந்த வேலைகளை பெற்று உரிய வகையில் ஒப்பந்த வேலைகளை நிறைவு செய்யாமல் அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி பலகோடி சொத்து சேர்த்துள்ள ஒருவர்
இவரது மனைவி அரச உத்தியோகத்தராக இருக்கும் போதும் அரசினால் பெற்றுக்கொள்ளமுடியாத சலுகைகளை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி பாரிய மோசடியில் ஈடுபட்டுள்ளார் இது தொடர்பில் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை அதிகாரிகள் இவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள மாட்டார்கள் காரணம் அனைவருக்கும் இலஞ்சம் வழங்கப்படுகிறது
இதனைவிட கிறிஸ்தவ சபைகளுடன் நெருங்கிய தொடர்புடையவர் கிழவன் குளம் கிராம மக்களின் எதிர்ப்புக் களை மீறி இரண்டு கிறிஸ்தவ சபைகளுக்கான கட்டடங்கள் அமைக்க துணைநின்று மக்களின் எதிர்ப்புக்களால் இன்றுவரை அவை பயன்பாட்டுக்கு கொண்டுவர முடியாமல் இருக்கிறது
இதனைவிட கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் பிரதேச சபை உறுப்பினராக போட்டியிட்டதோடு பிரதேச சபை செயலாளரும் இவருக்கு சார்பாக இவரை சனசமூக நிலைய தலைவராக வைத்துக்கொண்டு ஒப்பந்த வேலைகளை வழங்கி ஊக்கி வித்து பாரிய ஊழலுக்கு சொந்தக்காரன்
இவ்வாறு அரச உயரதிகாரிகளுடனான உறவு பொலிசாருடனான உறவுகளை இவர் கொண்டுள பின்னணியிலேயே இவர் இவ்வாறு எல்லா இடங்களிலும் தன்னை ஒரு பெரியவராக சித்தரித்து முரண்படுவது வழமை இந்த பின்னணியில் கிறிஸ்தவ சபைகளின் தூண்டுதலில் தான் இவர் யாழ்ப்பாணத்திலும் இவ்வாறு சண்டித்தணம் விட்டது மட்டுமின்றி ஊடகவியலாளரையும் ஊடகங்களையும் அச்சுறுத்தியுள்ளார்
இவர் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும் ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தலுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் அதேவேளை இவரதும் இவரது மனைவி பிள்ளைகளினது பெயரிலும் உள்ள சொத்துக்கள் அனைத்தும் எவ்வாறு வந்தது என்பது தொடர்பான இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்)
கருத்துகள் இல்லை