ஜப்பானுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு மேற்கொண்ட விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுறுத்தி ஜனாதிபதி அநுர ஜப்பானுக்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி நேற்று இரவு (25) ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் வௌிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொள்கிறார்.


.jpeg
)





கருத்துகள் இல்லை