இரவில் பல்லை துலக்க மறப்பது இதயத்துக்கும் ஆபத்து!
நமது அன்றாட வாழ்கையில் பல் துலக்குவது என்றாலே நமக்கு காலை பழக்கம் தான் நினைவுக்கு வரும். ஆனால், நீங்கள் தெரிஞ்சுக்கணும். இரவு பல் துலக்காமல் விடுறது, பற்கள் மட்டும் இல்லாமல் இதயத்துக்கும் பெரிய ஆபத்து தரும்!
2023-ல் Scientific Reports வெளியிட்ட ஒரு முக்கிய ஆய்வு:
இரவில் பல் துலக்காமல் இருந்தவர்கள், இதய செயலிழப்பு (Heart Failure) மற்றும் இதய துடிப்பு சீர்கேடு (Arrhythmia) காரணமாக மருத்துவமனையில் சேர வேண்டிய அபாயம் அதிகம் என கண்டறிந்தது.
இதனால், பல் துலக்கும் பழக்கம் = பற்கள் மட்டும் அல்ல, இதய ஆரோக்கியத்தையும் காப்பாற்றும்
எப்படி இதயத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது?
இரவு துலக்காமல் விட்டால் வாயில் பாக்டீரியா அதிகரிக்கும்.
அந்த பாக்டீரியாக்கள் ஈறுகளை பாதித்து, அழற்சியை (Inflammation) உண்டாக்கும்.
இந்த அழற்சி இரத்தத்துக்கு சென்று, இரத்தக் குழாய்களை சேதப்படுத்தும்.
இதனால் இதய நோய்கள், Stroke அபாயம் கூட அதிகரிக்கும்!
ஏன் இரவு துலக்குவது மிக முக்கியம்?
இரவில் நாம் தூங்கும்போது உமிழ்நீர் (Saliva) சுரப்பது குறையும்.
இதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் வேகமாக பெருகும்.
அதுவே ஈறு நோய், பல் சிதைவு, மூச்சு துர்நாற்றம் மட்டுமல்லாமல் இதய நோய்களுக்கும் வழிவகுக்கும்.
உங்கள் தினசரி Oral Care Routine எப்படி இருக்கணும்?
காலை & இரவு – 2 தடவை பல் துலக்க வேண்டும்.
தினமும் Floss பண்ணி பற்கள் நடுவில் சுத்தம் செய்ய வேண்டும்.
Mouthwash பயன்படுத்தினால், பாக்டீரியா குறையும்.
6 மாதங்களுக்கு ஒருமுறை Dental Checkup அவசியம்.
நினைவில் கொள்ள வேண்டியது:
காலை துலக்குறேன், போதும்!”ன்னு நினைக்காதீங்க.
இரவு துலக்குறது தான், உங்க பற்கள் + இதயத்துக்கு உண்மையான பாதுகாப்பு!
ஒரு சிறிய பழக்கம் = பெரிய ஆரோக்கிய பாதுகாப்பு
இரவு 2 நிமிடம் பல் துலக்கினாலே, நீங்கள் பல் சிதைவு, ஈறு நோய், மூச்சு துர்நாற்றம் மட்டும் இல்லாமல், இதய நோய் அபாயத்தையும் குறைக்க முடியும்!

.jpeg
)





கருத்துகள் இல்லை