இதுதான் பூகோள அரசியல் !


ஈழத்தில் அரசியல் உரிமைக்காகவும் சொந்தக் காணிக்காகவும் போராடுவதனை சிலர் கடற்பயணத்தில் கப்பலை ஆட்டிக்கவிழ்க்கும் செயற்பாடு என்று கூறி போராட்டங்களைக் கொச்சைப்படுத்துகிறார்கள். 

அல்லது விகாரையை இடிக்கச் சொல்லுவது மடைத்தனம் என்றுகூறி போராட்டஙலகளை கொச்சைப்படுத்தி மக்களை போராட்டத்திலிருந்து அன்னியப்படுத்தி இந்திய மேற்குலகின் எடுபிடிகளாக மாறிவிட்ட என்பிபி அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கிறார்கள். 

அதனால் ஏனைய எம்பிமார் எவரும் போராட்டக்களம் வருவதில்லை.  

இப்போராட்டங்கள் வல்லரசு சக்திகளுக்கு தேவையற்ற நெருக்கடி


ஆனால் நேபாளத்தில் சமூக ஊடகங்களை தடைசெய்தமைக்காக 19 பேர் உயிர்கொடுத்துள்ளார்கள். 


ஏனெனில் வல்லாதிக்க சக்திகளுக்கு தற்போதய ஆட்சியாளரை கவிழ்க்க ஒன்றில் சமூக ஊடகங்களூடாக கண்டபடி எழுதி மக்களை அரசுக்கு எதிராகத் திருப்பி அரசாங்கத்தை தேர்தல் மூலம் கவிழ்ப்போம் என்ற அச்சத்தை அரசாங்கத்துக்கு ஏற்படுத்தி தமது வழிக்குக் கொண்டுவர வேண்டும். 


இல்லையேல் மக்கள் போராட்டத்தை தூண்டி அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளிஆட்சியை அடிபணிய வைக்க வேண்டும் அல்லது கவிழ்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.