அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!
அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார் என பொலிஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை வத்துகெதரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலருடன் பயணித்த முச்சக்கர வண்டி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டின் இலக்கு, குண்டுகளால் தாக்கப்படவில்லை என்றும், ஆனால் தாக்குதல் நடத்தியவர்களுடன் ஏற்பட்ட மோதலின் போது அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் வேறு எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், துப்பாக்கிதாரிகள் இருவரையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை