நாளை 08.09.2025 நோர்வேயின் பாரளுமன்ற தேர்தலில் கம்சி.!
பாராளுமன்ற மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 169.
தனித்து ஆட்சி அமைக்க 85க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தேவை.
தற்போது ஆட்சியில் இருப்பது நோர்வேயின் தொழிலாளர் கட்சி.
48 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இன்னும் இரண்டு மற்றைய கட்சிகளின் ஆதரவோடு..
யாழ்ப்பாணத்தில் பிறந்து தனது 4-5 வயதில் நோர்வேக்கு புலம்பெயர்ந்து, இன்று நோர்வே அரசியலில் மிகப் பிரபலமான ஒரு அரசியல் பிரமுகராக இருக்கிறார் ..
கம்சாயினி குணரத்தினம்..
ஏற்கனவே ஒஸ்லோ நகரின் பிரதி மேயராக பதவி வகித்தவர்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியிலிருக்கும் தொழிலாளர் கட்சி சார்பாக முதன் முறையாக ஒஸ்லோ நகரிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது புலம்பெயர் தமிழிச்சி கம்சி அவர்கள்.
நாளை நடைப்பெறப்போகும் தேர்தலிலும் அவர் மீண்டும் வெல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கட்சியின் கொள்கைகளை கடந்து, தமிழிச்சி ஒருவர் நோர்வேயின் பாராளுமன்றத்தில் இருப்பது, தமிழர்களுக்கு பெருமையே.
நோர்வேயில் இருக்கும் வெளிநாட்டு பின்புலத்தை கொண்ட அரசியல்வாதிகளில் கம்சி தனித்துவமானவர், குறுகிய காலத்தில் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல, வேறு வெளிநாட்டவர்கள் மற்றும் நோர்வேஜியர்கள் மத்தியிலும் தனது அரசியல் செயற்பாடுகளால் மிக பிரபலமடைந்துவிட்டார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை