கொழுப்பு தேசிய வைத்தியசாலையில் குழந்தையின் சடலம் மாயம்!!
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிப்பறையில் ஒகஸ்ட் முதலாம் திகதி குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து தெமட்டகொட பொலிஸார் விசாரணை நடத்தி, நீதவானின் உத்தரவின் பேரில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறையில் குழந்தையின் சடலம் வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த மாத இறுதியில் தெமட்டகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிணவறைக்கு சென்று குழந்தை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்த போதே குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
.சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை