கன்னித்திங்கள் காரிநோன்பு (புரட்டாதி சனிவிரதம்)
20. 09. 2025, 1ம் சனி
27. 09. 2025, 2ம் சனி
04. 10. 2025, 3ம் சனி
11. 10. 2025, 4ம் சனி
நாளும் காலை 09.00 மணிமுதல்
காரிப்பெருமான் (சனீச்சுரரின்) அருட்குரு தலைவன் எம்பெருமான் ஞானலிங்கர் சிவபெருமான் ஆவார். முழுமுதற்கடவுளின் சிவவழிபாடு சனீச்சுரர் கழுவாய்களில் (தோசங்களில்) இருந்து வீட்டினை அளிக்கும், வினை ஒழிய அருள்பொளியும்.
செந்தமிழ்த் திருமறையில் நாளும் வழிபாடுகாணும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருநள்ளாற்றுப் பெருமானாக வீற்றிருக்கும் ஞானலிங்கேச்சுரத்தில், தனிக்கோவில் கொண்டு எழுந்தருளும் காரி எனப்படும் சனீச்சுரப்பெருமானிற்கு கன்னித்திங்கள் சனிக்கிழமை தோறும் சிறப்பு முழுக்கு இடம்பெற்று பல்சிறப்பு வேள்வியும், ஒன்பது கோள்கள் வழிபாடும், சிறப்புக் கூட்டு வழிபாடும் நடைபெறவுள்ளது.
அடியார்கள் சனிக்கிழமைதோறும் நல்லெண்ணை தீபம் ஏற்றுவதுடன் எள்ளமுது படைத்து காரி சிறப்பு வழிபாடுகள் ஆற்றலாம்.
அனைத்து வழிபாடுகளிலும் அனைவரும் நேரடியாகப் பங்கெடுத்து முழுமுதற்கடவுள் சிவபெருமான் நிறையருளையும், சனீச்சுரர் திருவருளையும் பெற்று விளங்க சிவான்புடன் அழைக்கின்றோம்.
சுவிற்சர்லாந்து நாட்டில் பேர்ன்நகரில் ஞானலிங்கேச்சுர்த்தில் திருநள்ளாற்று அருளனாக எழுந்தருளம் காரிப் பொருமான் இணையடி பணிந்து, காலம் விதி வென்று சாலவும் சிறந்து மண்ணில் சீருடன் சிறந்து பெருவாழ்வு வாழ்வோமாக!

.jpeg
)





கருத்துகள் இல்லை