பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு!!

 


வவுனியாவில் இன்று - புதன்கிழமை பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

வவுனியா மதவு வைத்த குளத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 293 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இந்த பொருளாதார மத்திய நிலையம் பெரும் இழுபறிகளின் பின்னர் ஏழு ஆண்டுகளுக்குப்பிறகு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அனைத்து வசதிகளுடனும் 50 கடைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 35 கடைகள் வவுனியா மொத்த வியாபார சந்தை வியாபாரிகளுக்கும் ச. தொ. ச நிறுவனத்திற்கு ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக வாணிப அமைச்சர் வசந்தசமரசிங்க மற்றும் பிரதி அமைச்சர்களான எம்.ஜெயவர்த்தன, உபாலிசமரசிங்க, மாநகரசபை முதல்வர் சு.காண்டீபன், பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ. திலகநாதன் ஆகியோரால் நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.