“நாகபாம்பு விளைவு” (Cobra Effect)
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் நாக பாம்புக்கடி மிக மோசமாக இருந்தது. இதனால் டெல்லியில் ஆங்கிலேயர்கள் ஒரு அறிவிப்பு வைத்தார்கள்:
“ஒவ்வொரு சாவடைந்த நாகத்துக்கும் (Dead Cobra) நாங்கள் பணம் தருகிறோம்.”
முதலில் நல்ல யோசனை போல இருந்தது. மக்கள் நாகங்களை கொன்று கொண்டு வந்து கொடுத்து பணம் பெற்றார்கள்.
பிறகு சிலர் நாகங்களை வீட்டில் வளர்த்து, அதை கொன்று கொண்டு வந்தார்கள் கொடுத்து பணம்பெற்றார்கள்.
சிறிது காலத்தில் அரசு அந்த திட்டத்தை நிறுத்தியதும், அவர்கள் வளர்த்த நாகங்களை எல்லாம் வெளியில் விட்டுவிட்டார்கள்.
அதனால் என்ன ஆயிற்று? முந்தையதை விட அதிக நாகங்கள் தோன்றின.
இதையே “நாகபாம்பு விளைவு” (Cobra Effect) என்பார்கள் – நல்ல நோக்கத்துடன் கொடுக்கப்பட்ட பரிசு (Carrot, பின்பு எதிர்மறை விளைவு தருவது (negative backfire).
இதைப்போல, ஒரு ஹோட்டல் பணியாளர்களுக்கு “விருந்தினர் நல்ல மதிப்பீடு (review) கொடுத்தால் பரிசு தருவோம்” என்று சொல்கிறார்கள்;.
முதலில் மதிப்பீடுகள் அதிகமாக வந்தன.
ஆனால் சிறிது நாளில், பணியாளர்கள் நல்ல சேவை செய்வதற்குப் பதிலாக மதிப்பீடுகளை மட்டும் பெற முயற்சித்தார்;கள்.
பரிசு நிறுத்தப்பட்டதும், உண்மையான அக்கறை குறைந்து, விருந்தினர் திருப்தியும் குறைந்து விட்டது.
விருந்தோம்பலில் நிலையான வெற்றிக்கு, பண்பாடு, சேவைக்கான பெருமை, மனதிலிருந்தே வரும் தூண்டுதல் ஆகியவையே முக்கியம் — பரிசு மட்டும் அல்ல.
பாடம்: குறுகிய கால பரிசுகள், நீண்ட கால பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

.jpeg
)





கருத்துகள் இல்லை