நேரில் ஆஜராக மகளிர் ஆணையம் சம்மன்!
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, கடந்த மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், ”ரங்கராஜ் எனது கணவர், நாங்கள் திருமணம் செய்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தோம். ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எனது தொடர்பை அவர் முற்றிலும் துண்டித்துள்ளார். நான் அவரை நேரில் சந்திக்க முயன்ற போது, என்னை அடித்து விரட்டினார். இப்போது என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை. எனக்கும் என் குழந்தைக்கும் நேர்ந்த இந்த ஏமாற்றத்திற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும். அவர் என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சென்னை, சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது திருமணம் மோசடி தொடர்பாக ஜாய் கிரிசல்டா புகார் ஒன்றை அளித்துள்ளார். காவல் துறையினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் அவர் தரப்பில் கூறப்பட்டது.
மேலும் மகளிர் ஆணையத்திலும் ஜாய் கிரிசில்டா புகார் அளித்த நிலையில், வரும் புதன்கிழமை மகளிர் ஆணையத்தில் இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக வேண்டுமான ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அதே நாளில் புகார் அளித்த பெண்ணும் ஆஜராக வேண்டும் என மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது

.jpeg
)





கருத்துகள் இல்லை